கொரோனா பாதிப்பு குறைவால் பொருளாதார மீட்சிக்கு வாய்ப்பு!

Update: 2021-07-09 00:45 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்து வருகின்ற நிலையில், 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்பட்ட தாக்கத்தில் இருந்து பொருளாதாரம் மீள வாய்ப்புள்ளது என்று PHDCCI வியாழக்கிழமை அன்று தெரிவித்தது.


PHDCCI பொருளாதார GPS குறியீடு ஜூன் மாதம் 110.3 ஆக உயர்ந்துள்ளது, மே மாதத்தில் ஒன்பது மாத குறைவாக 91.5 ஆக இருந்தது. புதிய கொரோனா தொற்று குறைந்துவரும் நிலையில், நாட்டில் பல்வேறு பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பின்னணியில், பொருளாதார மீட்சி மீண்டும் நாட்டில் தொடங்கியுள்ளது என்று PHDCCI தலைவர் சஞ்சய் அஃகர்வால் தெரிவித்தார்.

"பாதிப்பு படிப்படியாகக் குறைவது 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் காணப்பட்ட பொருளாதார அச்சுறுத்தல் தாக்கத்தில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது," என்று குறிப்பிட்டது.


இந்த நேரத்தில், பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவையை அதிகரிக்க, வீட்டு நுகர்வோர் மற்றும் தனியார் முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் கொடுப்பது அவசியம். ஏனெனில் இது நாட்டின் அடிப்படை முதலீட்டில் விரைவாக விளைவை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source: எகனாமிக் டைம்ஸ் 

Similar News