காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தொழில்நுட்பங்களில் பங்கு!

Update: 2021-07-10 10:30 GMT

வெள்ளிக்கிழமை அன்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலநிலை மாற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் தொழில்நுட்பங்களின் பங்கு குறித்து வலியுறுத்தினார் மற்றும் மாற்று எரிசக்தி மற்றும் தொழில்நுட்பங்களின் விநியோகத்தை அதிகரிக்கவும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் அழைப்பு விடுத்தார்.


3 வது G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் கூட்டத்திற்கு முன்னதாக, இத்தாலி ஏற்பாடு செய்திருந்த வரி கொள்கை மற்றும் காலநிலை மாற்றம் குறித்த G20 உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.

மேலும் இந்தியாவில் சிறந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்த நிதிக்கொள்கை விருப்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கச் சலுகை வரி விகிதங்கள் உள்ளதாகவும் நிதியமைச்சர் மேற்கோள்காட்டிக் கூறி தனது தொடர் ட்விட்டிலும் தெரிவித்திருந்தார்.


மேலும் இந்தியாவில் சிறந்த சுற்றுச்சூழலை அமைக்கப் புதுமையான கொள்கைகளையும் சீதாராமன் பகிர்ந்து கொண்டார், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள், வளர்ந்து வரும் எரிபொருள்கள், சர்வதேச சோலார் அலையன்ஸ் மற்றும் ஆற்றல் திறன் மற்றும் காடு வளர்ப்பு ஊக்குவிப்பு போன்ற திட்டங்களைப் பகிர்ந்து கொண்டார்.

Source: எகனாமிக் டைம்ஸ் 

Similar News