சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்: ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை முடிவு!

வளரக் கூடிய பொருளாதார நாடாக இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளி முன்னேறி இருக்கிறது.

Update: 2021-09-17 13:13 GMT

உலக நாடுகளில் மிகவும் வேகமாக வளரக்கூடிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலகளவிலான பொருளாதார வளர்ச்சியில், இந்தியாவை அடுத்து சீனா இருக்கும் என்றும் அந்த ஆய்வு தன் கணிப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு குறித்த கூட்டத்தில் தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிக்கையில், இந்தியா 2022 ஆம் ஆண்டில் 6.7% வளர்ச்சி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


மேலும் உலகின் மிக வேகமான வளர்ச்சியாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சீனா 5.7 சதவீத வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்டு, இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், 2021ல் சீனாவின் வளர்ச்சி 8.3 சதவீதமாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சி 2021 ஆம் ஆண்டில் 7.2 சதவீதமாக இருக்கும். உலகளவிலான பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும். இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியாக இருக்கும்.


குறிப்பாக நோய்த் தொற்றுக்கு பிறகு பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரிவை சந்தித்தது. இருந்தால் அத்தகைய காலங்களில் கூட பல்வேறு நாடுகள் வளர்ச்சியடைந்தன. 2019 ஆம் ஆண்டு இருந்த வளர்ச்சியை விட கூடுதல் வளர்ச்சியை காணும். இருப்பினும், மேற்கொண்டு கொரோனா பாதிப்புகள் அதிகம் இருக்காது என கொண்டாலும் கூட, பல நாடுகள் கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியை எட்டுவதற்கு 2030 ஆம் ஆண்டுவரைகூட ஆகக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy:Economic times

Tags:    

Similar News