இந்திய பங்குச்சந்தையில் மூன்று மாதங்களில் ஒரு கோடி முதலீட்டாளர்கள் - டிஜிட்டல் மயமானதால் அபார வளர்ச்சி!
இந்தியாவில் தற்பொழுது பங்குச்சந்தையில் மூன்று மாதங்களில் ஒரு கோடி முதலீட்டாளர்களை பெற்றுள்ளது.
இந்திய பங்குச் சந்தை விலை பொருத்தவரையில், NSE மற்றும் BSE ஆகி இரண்டும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இந்தியாவில் முன்பு இருந்த காலகட்டங்களில் இந்திய பங்குச்சந்தைகள் பற்றிய கருத்தை மக்களுக்கு அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. ஆனால் தற்போது மாறிவரும் டிஜிட்டல் சூழ்நிலையில், அதிகமான மக்கள் தங்களுடைய முதலீட்டை பங்கு சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். இந்தியாவில் தற்பொழுது உள்ள மூன்று மாதங்களில் பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் மொத்த எண்ணிக்கையை 4 கோடியை தாண்டி உள்ளது. வெறும் 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல காலகட்டத்தில், இந்தியாவின் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மெதுவான வேகத்தில் வளர்ந்துள்ளது. பெரும்பாலான மக்கள் மும்பைக்கு வெளியே இருப்பதால், பத்திர வர்த்தகத்தில் ஈடுபடுவது மிகவும் சிக்கலானதாக இருந்தது. மேலும் பல்வேறு மோசடி கதைகளும் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து டிஜிட்டல்மயமானதால் யார்? வேண்டுமானாலும் எப்பொழுதும் பங்குச் சந்தைகளில் ஈடுபடலாம் என்பது போல் மாறியது. இந்த ஒரு மாற்றம் தான் இந்திய பொருளாதாரத்திற்கு உத்வேகத்தைக் கொடுத்தது.
பங்குச் சந்தைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு புரட்சியை உருவாக்கி வருகின்றனர். இருப்பினும், இந்திய அரசாங்கத்தால் கட்டப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதி அதிலும் குறிப்பாக தனித்துவமான ID, JAM(ஜன் தன் கணக்குகளுடன் மொபைல் எண் இணைத்தல் மற்றும் ஆதார் அட்டையுடன் அடையாள சான்று), யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்(UPI) போன்றவை மக்களின் எளிதான நடைமுறைகளுக்கு வழிவகுத்தது. முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் அதிவேக வளர்ச்சி, குறிப்பாக UPI வந்த பிறகு தான் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்தியப் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
Input & Image courtesy:TFI post new