தொழில்நுட்பத்துறையில் பின்வாங்கும் சீனா: விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா!

தொழில்நுட்பத்துறையில் சீனாவின் வீழ்ச்சி, இந்தியாவிற்கு பெரிய அளவில் தொழில்நுட்ப துறையில் வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

Update: 2021-09-26 13:08 GMT

21ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் அனைவரையும் கொண்ட நாடாக சீனா விளங்கி வருகிறது. அலிபாபா, ஹவாய் மற்றும் டென்சென்ட் போன்ற சீன நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது.

ஆனால் தற்பொழுது அங்கு இருந்து வரும் தொழில்நுட்பத் துறையின் சிக்கலான நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு முறைகள் காரணமாக பல்வேறு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீடுகளை சீனா நிறுவனங்களிடம் இருந்து காத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதன் காரணமாக சீன தொழில்நுட்பத் துறையிலிருந்து உலகம் வெளியேறுகிறது மற்றும் சீனாவுக்குப் போட்டியாக இருக்கும் மற்றொரு ஆசிய நிறுவனமான இந்தியா சீன முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க தயாராக உள்ளது.


சீனாவின் தொழில்நுட்பத் துறை இரண்டு காரணங்களுக்காக ஒரு பெரிய நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது. சீன தொழில்நுட்பத் துறைக்கு எதிராக வளர்ந்து வரும் மற்ற நாடுகளில் போட்டிகள் மற்றும் சீனாவில் விதிக்கப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் தான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

சீனா தனது தொழில்நுட்ப தொழில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இது இந்தியாவுக்கு நல்ல செய்தி. உண்மையில், இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு வரும்போது சில ஊக்கமளிக்கும் அறிகுறிகளை நாம் ஏற்கனவே பார்க்கிறோம். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான பிளிப்கார்ட், சமீபத்தில் 37.6 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டாளர்கள் குழுவிலிருந்து 3.6 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளதாக அறிவித்தது. 


மேலும், சோமாடோ போன்ற சில இந்திய IT நிறுவனங்களின் மதிப்பீட்டின் உயர்வு, ஒரு குறிப்பிடத்தக்க முதலீட்டாளர்களின் குறியீடுகளை காட்டுகிறது. இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(MEITY) அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவை 1 டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்ற 1,000 நாள் திட்டம் தற்போது இந்தியாவுக்கு சாதகமான ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.  

Input & Image courtesy: TFI post

Tags:    

Similar News