அதிகளவு ஆதிக்கத்தை செலுத்தும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் !
இந்திய பொருளாதாரத்தில் அதிக அளவு தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி டிஜிட்டல் சேவை நிறுவனம்.
இந்தியப் பங்குச்சந்தை மிகவும் சிறப்பாக வளர்ச்சி அடையவும் மற்றும் அதிகளவிலான முதலீடுகளை மேற்கொள்வதும் மிக முக்கியக் காரணங்களில் ஒன்று IPO. 2021ல் வந்த பல IPOக்கள் ரீடைல் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை அள்ளிக் கொடுத்தது. IPO ஆங்கிலத்தில் Initial Public Offering என்று அழைக்கப்படுகிறது. IPO என்பது பெரிய நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் நிதி திரட்டும் முறையாகும். இதில் நிறுவனம் தனது பங்குகளை முதல் முறையாக பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது. ஒரு IOP வைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யப்படுகின்றன. அதாவது இதுவரை தனியார் பங்குகளை மட்டும் பெற்று வந்த கம்பெனி தற்போது பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது தான் இதன் அர்த்தம்.
ஒரு IPOவை மேற்கொள்வதற்கான சில முக்கிய காரணம், பங்குகளின் விற்பனையிலிருந்து மூலதனத்தை திரட்டுதல், நிறுவன நிறுவனர்களுக்கும் ஆரம்ப முதலீட்டாளர்களுக்கும் பணப்புழக்கத்தை வழங்குதல் மற்றும் அதிக மதிப்பீட்டைப் பயன்படுத்திக் கொள்வது. இந்தியாவில் தற்பொழுது பல்வேறு தனியார் நிறுவனங்கள் இந்த முயற்சி கையில் எடுத்துள்ளன. இந்நிலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தையில் சுமார் 30 நிறுவனங்கள் IPO வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த 30 நிறுவனங்கள் IPO வெளியிடுவதன் மூலம் சுமார் 45,000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட முடிவு செய்துள்ளது.
இதைவிடவும் மிக முக்கியமானது IPO வெளியிடத் திட்டமிட்டுள்ள 3 நிறுவனத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களாகும். இதில் குறிப்பாக ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ IPO வெளியிட்டு மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்கள் மிகவும் ஆர்வமுடன் IPO வெளியிட முன்வருகின்றனர். டெக் நிறுவனங்கள் ஆதிக்கம் இதன் மூலம் அடுத்த சில வருடத்தில் அமெரிக்கச் சந்தை போல இந்திய சந்தையிலும் டெக் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கச் சந்தையில் பல துறை நிறுவனங்கள் இருந்தாலும் டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் தான் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகிறது.
Input & Image courtesy:News 18