GST-இல் புதிதாக ஏற்பட்ட பொருட்களின் வரி மாற்றங்கள்!
இத்தகைய உற்பத்தி பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி தற்போது புதிதாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி என்று அழைக்கப்படும் GST மறைமுக வரி அமலாக்கம் செய்யப்பட்டு 4 வருடங்கள் ஆன நிலையில், தற்போது மத்திய நிதியமைச்சகம் மற்றும் GST கவுன்சில் இணைந்து முறையாகவும், உறுதியாகவும் வரியை விதிக்க திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு GST கூட்டத்திலும் வரி விதிப்பில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை புதியதாக வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, சோலார் மாடியூல், பழச்சாறு கார்பனேடெட் குளிர்பானம், மருந்து பொருட்கள் மீதான GST வரியை உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு அமைப்புகள் முதல் தனியார் அமைப்புகள் வரையில், தனிநபர் உட்பட அனைத்து தரப்பிலும் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில் இப்பிரிவு கருவிகளின் விலை அதிகரிக்கும் வரையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
12 சதவீதமாக வரி உயர்வும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எனர்ஜி கருவிகளான சோலார் பேனல், சோலார் மாடியூல், பயோ கேஸ் பிளான்ட், சோலார் பவர் ஜெனரேட்டார், காற்றாலை, சோலார் விளக்கு, அலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவிகள், பிளன்ட்கள், கருவிகள் ஆகியவற்றுக்குத் தற்போது 5% வரி இருக்கும் போது இதை 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
கான்டிராக்ட் இதைத் தொடர்ந்து தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தின் கான்டிராக்ட்-ல் 70 சதவீத மதிப்பைச் சரக்கு விநியோகமாகக் கருதப்பட்டு 5% GST வரி விதிக்கப்பட்ட இதன் அளவு 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. கார்பனேடெட் குளிர்பானம் மேலும் பழச்சாறுகளின் கார்பனேடெட் குளிர்பானம் அல்லது கார்பனேடெட் குளிர்பானத்தில் கலக்கப்பட்ட பழச்சாறுக்கு இனி 28% GST வரி மற்றும் 12 சதவீத செஸ் விதிக்கப்பட உள்ளது. அதாவது கார்பனேடெட் டிரிக்ஸ்க்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம்தான் உள்நாட்டுப் பழச்சாறு குளிர்பானங்கள் தயாரிப்போருக்கு லாபம் மற்றும் வர்த்தகம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
Input & image courtesy: Siasat