இந்திய பொருளாதாரம் சரியான வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறதா?
இந்திய பொருளாதார நோய் தொற்றிலிருந்து மீண்டு சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது.
2019ஆம் ஆண்டு உலகையே கொரோனா என்ற கொடிய வைரஸ் பல்வேறு வகையில் ஆட்டிப்படைத்தது. குறிப்பாக, பொருளாதார விஷயங்களைப் பொறுத்த மட்டில் வளர்ச்சியடைந்த நாடுகள் கூட திண்டாடும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவைப் பொருத்தமட்டில் பெரும்பாலும் ஊரடங்கு கள் அறிவிக்கப்பட்டு மக்கள் தங்களுடைய பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் உள்நாட்டு உற்பத்தி முடங்கி, ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. அதிலும் தொழில்துறை மோசமாக பாதிக்கப்பட்டது என்று சொல்லலாம். ஆனால் தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
எனினும் இந்த ஆண்டு மத்திய அரசின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தால் மீண்டும் இயல்பு நிலைக்கு இந்தியா முழுவதும் திரும்பி வருகிறது. பொருளாதார வளர்ச்சியும் மேல்நோக்கி பயணிக்கத் தயாரானது. பொருளாதார வளர்ச்சி குறித்து பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான அரவிந்த் பனகாரியா இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "இந்திய பொருளாதாரம் தற்பொழுது வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டிருக்கிறது.
தடுப்பூசித் திட்டம் தொடர்பான செய்திகள் மக்களிடம் தற்பொழுது பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்தியக் குடிமகன்களாக நாமும் நமது பங்களிப்பை வழங்க வேண்டும். அதிலும் குறிப்பாக பொது இடங்களில் மாஸ்க் அணிவது போன்ற விஷயங்களில் சரியாக இருக்க வேண்டும். 2020-21 நிதியாண்டின் 3வது மற்றும் 4வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி கொரோனாவுக்கு முந்தைய அளவை எட்டிவிட்டது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதைகள் மிகவும் சிறப்பாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy:Economic times