அதிகமான மாற்றங்களை எதிர் கொண்டு வரும் இந்திய பொருளாதாரம் !

அதிகமான மாற்றங்கள் இந்திய பொருளாதாரம் எதிர் கொண்டு வருகிறது.

Update: 2021-10-10 13:08 GMT

இந்திய பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த மாற்றங்கள் தொழில்நுட்பத்துடன் கூடிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியதுதான். இதில் உள்ள மற்றுமொரு சிறப்பம்சம். புதிய இந்தியாவில், ஒவ்வொரு தனி நபரின் அடிப்படை தேவைகளான நீர், துாய்மையான சுற்றுப்புறம், குடியிருப்பு, சுகாதாரம் போன்றவை வழங்கப்படும். மக்களை மேம்படுத்துவதற்காக, புதிய இந்தியாவின் கொள்கைகள் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வங்கி, காப்பீடு, சுத்திகரிப்பு, சுற்றுலா, விமான சேவைகள் ஆகியவற்றிலும் தனியார் துறையில் ஈடுபாடு பொருளாதாரத்தை உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. 


தற்போது இருக்கும் கால கட்டங்களில் ஏராளமான சீர்திருத்தங்கள், புத்துயிரூட்டுதல் நடவடிக்கைகள் முழு அளவில் தொடங்கின. அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பிறகு எந்த ஒரு சேவைகளையும் நம் இணையதளத்துக்கு பெறுவதற்கும் இது வழிவகுத்தது. இதனை தொடர்ந்து, உடனடியாக நேரடி மானிய திட்டம் வாயிலாக, ஓய்வூதியம், ரேஷன், எரிபொருள், நல நிதி ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. GST வாயிலாக, நாடு தழுவிய அளவில் பல முறை வசூலிக்கப்படும் மறைமுக வரிகள் அனைத்தும் ஒன்றாக வசூலிக்கப்பட்டது. இது வெளிப்படைத் தன்மைக்கு வழிவகுத்தது. 


நடப்பு நிதி ஆண்டில் 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த கொள்கை இடம் பெற்றது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அரசுத் துறைகளுக்கு, இணையாக தற்போது தனியார் துறையினருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு துறையில் தானியங்கி முறையில், 74 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சரியான நடவடிக்கை காரணமாக இந்திய பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை எதிர் கொண்டு வருகிறது. 

Input & Image courtesy:NDTV news

 


Similar News