தடுப்பூசியின் வேகம் இந்திய பொருளாதார வளர்ச்சியை மீட்டது ! -நிபுணர் கருத்து !
தடுப்பூசியின் வேகம் இந்திய பொருளாதார வளர்ச்சியை மீட்டது என்று சர்வதேச பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் குறிப்பாக இந்தியாவில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளும் வேகம் காரணமாக தற்போது இந்திய பொருளாதாரம் நல்ல வளர்ச்சியை எட்டி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா பொருளாதாரத்தின் வளர்ச்சி அதைப்போல தற்பொழுது நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என்று IMF கணித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக, 2020 இதே ஆண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக சரிவடைந்தது. பெரும்பாலான தொழில்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் முடங்கி விட்டன ஆனால் தற்போது 2021-ல் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 9.5 சதவீதமாகவும், 2022-ல் 8.5 சதவீதமாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடந்த மெய்நிகர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அவர்கள் இதுபற்றி கூறுகையில், " நோயின் பாதிப்பிலிருந்து தற்பொழுது இந்தியா மீண்டு வருகிறது. குறிப்பாக தடுப்பூசி வேகம் நல்ல வளர்ச்சியையும் எட்டியுள்ளது. இதன்காரணமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி வேகம் கடந்த ஆண்டை விட அதிகமாகவே உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைப்போல இந்தியாவுடன் வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடுகையில், குறிப்பாக அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி 6 சதவீதமாகவும், சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2021இல் 8 சதவீதமாகவும், 5.6 சதவீதமாகவும் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உலகளாவிய பொருளாதார வளா்ச்சி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்றும் சர்வதேச நிதியம் தனது அறிக்கையை கொடுத்துள்ளது.
Input & Image courtesy:NDTV news