இந்திய பொருளாதாரத்தில் பணவீக்கத்தின் தொடர்ச்சியான சரிவு !

இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய பணவீக்கம் தொடர்ச்சியான சரிவை நோக்கி கொண்டிருக்கிறது.

Update: 2021-10-16 12:44 GMT

நாட்டின் பணவீக்கத்தை அதிகரிப்பு பொருளாதாரத்தை பெருமளவில் பாதிக்கின்றது. அந்த வகையில் இந்தியாவில் தற்பொழுது பணவீக்கம் தொடர்ச்சியான வண்ணம் குறைந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 10.66 சதவீதமாகக் குறைந்து பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் வலுவைச் சேர்த்துள்ளது. உலகின் பல முன்னணி வல்லரசு நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து வருவது பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருவது மகிழ்ச்சியை அளித்துள்ளது.


ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் மொத்த விலை பணவீக்கம் 11.16 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் செப்டம்பர் 2021ல் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 11.4% இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்த வேளையில் கணிப்பை விடவும் குறைவாக இருந்த நிலையில் சந்தைக்கு இது சாதகமாக அமைந்துள்ளது. இதுமட்டுமல்ல மொத்த விலை பணவீக்கம் கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து இரண்டு இலக்க அளவீட்டிலேயே இருந்த நிலையில், தற்போது ஒரு இலக்கு எண்ணிற்குக் குறையத் துவங்கியுள்ளது. இந்தியாவில் மொத்த விலை பணவீக்கத்தை எரிபொருள் மற்றும் மின்சாரம், உணவுப் பொருட்கள், உற்பத்தி பொருட்கள் 3 முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துக் கணக்கிடப்படுகிறது. 


இதன்படி செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவின் மொத்த பணவீக்கத்தின் அளவு 24.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ஆகஸ்ட் மாதத்தில் 26.09 சதவீதமாக இருந்தது. மேலும் உற்பத்தி பொருட்கள் மீதான பணவீக்கம் 11.39 சதவீதத்தில் இருந்து 11.41 சதவீதமாக இந்தச் செப்டம்பர் மாதம் அதிகரித்துள்ளது. ஆனால் மொத்த விலை பணவீக்கத்தில் பெரும் பகுதி ஆதிக்கம் செய்யும் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் அதிகளவில் குறைந்துள்ளது. உணவு பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 3.43 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் இதன் அளவு 1.14 சதவீதமாகக் குறைந்துள்ளது. RBI பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு தான் தனது நாணய கொள்கை முடிவுகளை அறிவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy: Financial express



Tags:    

Similar News