தீபாவளிக்கு களம் இறங்கும் கூகுள் மற்றும் ஜியோவின் ஸ்மார்ட்போன் !

வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி முதல் அனைத்து ஜியோ கடைகளிலும் 'ஜியோ போன் நெக்ஸ்ட்' விற்பனையாக உள்ளது.

Update: 2021-10-31 12:56 GMT

இந்தியாவில் தற்பொழுது அனைத்தும் நவீன மயமாக்கப்பட்ட வருகின்றது. குறிப்பாக அனைவர் ஸ்மார்ட்போன்கள் அதிகமாக இருந்துவருகின்றன. இருந்தாலும் இன்னும் சில மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை. காரணம் அவர்களுடைய விலைக்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போன்கள் என்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது தற்பொழுது அனைத்துத் தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் இணைந்து இந்தியர்களுக்காக, இந்தியர்களால், இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜியோபோன் நெக்ஸ்ட் நவம்பர் 4ஆம் தேதி அதாவது தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுவதும் விற்பனைக்கு வர உள்ளதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  


இதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் போனை வெறும் 1999 ரூபாயில் வாங்க முடியும் என்பது தான். கூகுள் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் டிஜிட்டல் சேவையைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே பிரகதி OS என்ற பெயரில் புதிய ஆப்ரேட்டிங் சிஸ்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, கூகுள் இணைந்து தயாரித்துள்ள 'ஜியோ போன் நெக்ஸ்ட்' உண்மையான விலை ரூ. 6,499 ஆகும். ஆனால் ஜியோ இதை EMI சேவையின் கீழ் விற்பனை செய்ய உள்ளது. 


இந்தியா முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி முதல் ஜியோ மார்ட் கடைகளில் கிடைக்கும். மேலும் ஜியோ மார்ட் இணையத் தளத்திலும் ரிஜிஸ்டர் செய்து இந்தப் போனை பெறலாம். எனவே தற்போது புதியதாக அறிமுகப் படுத்தப்படும் ஜியோ போன் நெக்ஸ்ட்-ஐ மக்கள் எப்படி வரவேற் கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 4 EMI திட்டம், ஜியோ போன் நெக்ஸ்ட்-ஐ மொத்தமாக 6,499 ரூபாய் கொடுத்து வாங்கலாம் அல்லது 18/24 மாத EMI கீழ் Always-on, Large, XL, மற்றும் XXL எனச் சைஸ் கணக்காகத் திட்டத்தின் கீழ் பெறலாம். 

Input & Image courtesy:Economic times



Tags:    

Similar News