இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு நெட் ஜீரோ இலக்கு சாத்தியமா ?

இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய நெட் ஜீரோ இலக்கு சாத்தியமாகக் கூடுமா?

Update: 2021-11-10 13:29 GMT

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடாகும் 'நெட் ஜீரோ' அளவை அடையப் போராடி வருகிறது. அந்த வகையில் இந்தியா மட்டும் நெட் ஜீரோ அளவீட்டை அடைந்தால் பல நன்மைகள் உருவாகும் என உலகப் பொருளாதார அமைப்பு (WEF) தற்பொழுது அறிவித்துள்ளது. நெட் ஜீரோ இலக்கு என்பது வேறொன்றும் கிடையாது.


 ஒரு நாடு உற்பத்தி செய்யப்படும் கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும், வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு அளவிற்கும் இடையேயான சமநிலை தான் இந்த நெட் ஜீரோ. இதைச் செயல்படுத்த முதலில் கிரீன்ஹவுஸ் வாயு உற்பத்தியைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்பதே தற்போது உலக நாடுகளின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. உலகப் பொருளாதார அமைப்பின் கணிப்பின் படி, "இந்தியா நெட் ஜீரோ இலக்கை அடைய எடுக்கும் முயற்சிகள் மூலம் மட்டுமே 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள், 2070க்குள் 5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்" என்று கூறியுள்ளது.


 உலக அளவில் பருவநிலை மாற்றம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காரணத்தால், அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம். இந்த முயற்சியில் சர்வதேச பொருளாதாரமும் தனது இலக்கை மாற்றியுள்ளது என்று என்று உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பிற நாடுகளைக் காட்டிலும், இந்தியா கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவில் பல வழிகளில் கிரீன்ஹவுஸ் வாயு அதிகளவில் வெளியேற்றப்படுகிறது என்பதுதான்.

Input & Image courtesy:Indian Express


Tags:    

Similar News