மிகப்பெரிய ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம், மத்திய அரசுடன் இந்தத் திட்டத்தில் இணைய முடிவு !

ஆட்டோ மொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மத்திய அரசுடன், ஸ்கிராப் சென்டரை பிரான்சைஸ் இணைந்து செயற்பட தயார்.

Update: 2021-11-22 13:56 GMT

மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் பழைய வாகனங்களைப் பயன்பாட்டில் இருந்து நீக்க வேண்டும் என முடிவு செய்து vehicle scrappage policy இன்று ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்த நிலையில், இதற்கான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் வாகன ஸ்கிராப் திட்டத்தின் மூலம் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்கிராப் வர்த்தகம் உருவாக உள்ளது. இதேபோல் பிட்னஸ் தேர்வில் தேர்ச்சி அடையாத அனைத்து வாகனங்கள் ஸ்கிராப் செய்யப்படும் காரணத்தால் ஒவ்வொரு வருடமும் அதிகப்படியான வர்த்தகம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


இதற்காக இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், இந்தியா முழுவதும் வாகன ஸ்கிராப் சென்டரை பிரான்சைஸ் முறையில் துவங்க முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். டாடா மோட்டார்ஸ்-ன் முதல் ஸ்கிராப் சென்டரை அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இனிமே இதன் மூலம் பெரும்பாலான பழைய வாகனங்கள் நீக்கப்படலாம் என்பது ஒரு விஷயம்.


 பெரும்பாலான பழைய வாகனங்கள் இந்த பிட்னஸ் தேர்வில் தேர்ச்சி அடையாத வகையில் இருந்தால் அவற்றை இந்த திட்டத்தின் கீழ் மூலம் அப்புறப்படுத்தவும் இது உதவுகிறது. டாடா மோட்டார்ஸ் சில மாதங்களுக்கு முன்பு குஜராத் அரசுடன் இணைந்து அகமதாபாத் நகரில் புதிய வாகன ஸ்கிராப் சென்டரை-ஐ அமைக்கும் பணியைத் துவங்கியது. தற்போது இந்தியா முழுவதும் பிரான்சைஸ் முறையில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.

Input & Image courtesy:hindustantimes


Tags:    

Similar News