கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை குறித்து மத்திய நிதியமைச்சர் கூறியது என்ன?
இந்தியாவில் நடைபெற்ற பின்டெக் துறைசார்ந்த வீடியோ கான்பரன்சில் நிதியமைச்சர் கூறியது.
இந்தியாவில் முழுவதும் தற்போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது கிரிப்டோகரன்சி முதலீடு தான். ஏனெனில் பல்வேறு இந்தியர்கள் இதன் மீது முதலீடு செய்வதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். காரணம், அதில் வரும் லாபமும் அதே அளவிற்கு அதிகம் தான் இருந்தாலும் இதை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு ஒழுங்குமுறை சட்டம் இல்லாததும் இதிலுள்ள முக்கிய குறைபாடு இருந்தாலும், இன்றளவும் இதில் பல்வேறு மோசடிகளில் நடைபெற்று தான் வருகிறது. இந்த நிலையில் தான் இந்தியாவில் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்கு முறைப்படுத்தவும், தனியார் கிரிப்டோகரன்சியைத் தடை செய்யவும் திட்டமிடப்பட்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கிரிப்டோ மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய நிதியமைச்சகம் திட்டமிடப்பட்டுக் கடைசி நேரத்தில் பின்வாங்கியது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோகரன்சி சந்தையை ஒழுங்கு முறைப்படுத்துவது குறித்து முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சியை ஒழுங்கு முறைப்படுத்தக் கூட்டு முயற்சி வேண்டும். தொழில்நுட்பம் வேகமாகத் தொடர்ந்து வளர்ச்சி அடையும் காரணத்தால் கூட்டு முயற்சி தேவை என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் பின்டெக் துறை சார்ந்த InFinity Forum வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தைப் பிரதமர் மோடி வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாகத் துவங்கி வைத்தார். இக்கூட்டத்தில் தான் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கிரிப்டோகரன்சியை ஒழுங்குமுறை குறித்துப் பேசினார். எனவே இதில் கூட்டு முயற்சி மூலமாகத்தான் இதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
Input & Image courtesy: Economic times