மார்ச் மாதத்தில் வர்த்தக ஏற்றுமதியில் அதிக வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்ப்பு!

Update: 2021-03-12 03:58 GMT

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றுநோயால் வர்த்தகத்தில் சரிவு ஏற்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்றுநோயால் வர்த்தகத்தில் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மார்ச் மாதத்தில் நாட்டின் வர்த்தகத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருவதாகப் புதன்கிழமை அன்று வர்த்தக துறை செயலாளர் அனுப் வாதவன் தெரிவித்தார்.


"கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு நிலையாக மீட்சியடைந்து வருகின்றது. 2020 இல் செப்டெம்பர் மாதத்தில் ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கின. செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு சில மாதங்கள் சரிவு ஏற்பட்டாலும், ஜனவரி 2021 இல் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது" என்று அவர் குறிப்பிட்டார்.

"பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டாலும் தற்போது மார்ச் மாதத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது" என்று வெப்னாரில் குறிப்பிட்டார். இந்தியாவின் ஏற்றுமதி சரிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தொற்றுநோயிலிருந்து விரைவாக வளர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரியில் இந்தியாவின் ஏற்றுமதி 0.25 சதவீதம் குறைந்து 27.67 பில்லியன் டாலராக இருக்கின்றது. இதற்கிடையில் அதே மாதத்தில் இறக்குமதி 6.98 சதவீதம் அதிகரித்து 40.55 பில்லியன் டாலராக உயர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் மார்ச் வர்த்தகம் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகை, பெட்ரோலியம் போன்ற துறைகளில் வர்த்தகம் இன்னும் அதிகரிக்க வேண்டும் மற்றும் மருந்து, உணவு போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அப்படியே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் இந்தியாவை உலகத்தின் வர்த்தக மையமாக உருவாக்க உள்ளதாகவும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். நிதி மற்றும் காப்பீடு போன்ற துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் பெருமளவில் உள்ளதாகவும் வாதவன் தெரிவித்தார்.

Similar News