தொற்றுநோய் காலங்களில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை பொருளாதாரத்தை மீட்கவுதவியது- அனுராக் தாகூர்!
செவ்வாய்க்கிழமை அன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி மற்றும் கார்பொரேட் விவகாரத்துறை அமைச்சருமான அனுராக் சிங் தாகூர், கொரோனா தொற்றுநோய் காலங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியது. மேலும் அடுத்த நிதியாண்டில் நாடு இரட்டை வளர்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கம் PLI திட்டத்துக்கு 1.97 கோடியைச் செலவிடும் மற்றும் மேற்கொண்டு 10 துறைகளைச் சேர்த்து அது இளைஞர்களுக்கு மேலும் வேலைவாய்ப்பினை வழங்கும் வகையிலும் இருக்கும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். பொருளாதார மீட்டெடுக்கப்படுவது குறித்து அச்சத்தைத் தெரிவித்து வருபவர்கள் கடந்த சில மாதங்களில் GST வசூல் குறித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
"மக்கள் பல கேள்விகளை எழுப்பி வந்தாலும். கடந்த ஐந்து ஆண்டுகளில் GST வசூல் 1.10 லட்சம் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கம் கையாண்ட நடவடிக்கைகளே ஆகும்," என்று அவர் குறிப்பிட்டார். இந்திய V வடிவ மீட்பு வளர்ச்சி இருக்குமென்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 2021-22 நிதியாண்டில் 11.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று IMF அறிக்கை தெரிவித்துள்ளது.
"அடுத்த ஆண்டில் 12 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளது. OECD அது 12.6 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது," என்று குறிப்பிட்டார். மேலும் ஜம்மு&காஷ்மீர் மற்றும் புதுச்சேரியில் மசோதா ஒதுக்கீடு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், பொது நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து யாரும்
அரசாங்கம் முதலீடு குறித்த கொள்கைகளில் வெளிப்படைத் தன்மைகளைக் கொண்டுள்ளது. "PLI திட்டத்தின் கீழ் மொபைல் உற்பத்தியைக் கொண்டுவந்துள்ளோம். முன்னர் இந்தியாவில் இரண்டு மொபைல் தயாரிப்பு நிறுவனங்களே இருந்தது ஆனால் ஐந்து ஆண்டுகளில் உலகின் மொபைல் தயாரிப்புகளில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளோம்," என்று அவர் கூறினார். இதுபோன்ற பல திட்டங்களை வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்காகக் கொண்டுவரவுள்ளோம் என்றும் கூறினார்.