கூட்டுறவுத் துறையை மேம்படுத்த மத்திய அரசு கூட்டுறவு மேம்பாட்டுத் துறை அமைப்பு!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்கினை கொண்டுள்ள கூட்டுறவுத் துறையைப் புதுப்பிப்பதற்கும் மற்றும் அதனை மேம்படுத்துவதற்கும் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையின் கீழ் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்(CDF) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
"எதிர்காலத்தில் இந்த துறையின் வளர்ச்சியை உறுதி செய்து கூட்டுறவுத் துறையைப் புதுப்பிப்பதற்காகவும் மற்றும் அதனை மேம்படுத்துவதற்காகவும் CDF உருவாக்கப்பட்டுள்ளது," என்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் G20 மற்றும் G7 ஷெர்பாக மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரபு இந்த மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் IFFCO நிர்வாக இயக்குநர் U S அஸ்வதி, KRIBHCO தலைவர் சந்திர பால் சிங் யாதவ், NCUI தலைவர் திலீப் சங்ஹானி, இந்தியத் தேசிய கூட்டுறவு பால் கூட்டமைப்பின் தலைவர் மங்கள் ஜித் ராய் மற்றும் NAGCUB தலைவர் ஜ்யோதின்ற மெஹதா ஆகியோரும் மன்றத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது இந்தியாவில் கூட்டுறவு நிறுவனங்களில் பால், வங்கி, தறி, நுகர்வோர், உரம், விவசாயம், உணவு பதப்படுத்துதல் மற்றும் பிறவற்றில் 28 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இது அனைத்தும் பெரியளவில் கிராமங்களை வேளாண் கடன் சங்கங்களின்(PACS) கீழ் இணைகிறது என்று பிரபு தெரிவித்தார்.
மேலும் இந்த மன்றமானது பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிற்பார் பாரத், ஸ்வச் பாரத் அபியன், ஆயுஷ்மான் பாரத் மற்றும் PMUDAY முதலியவற்றுடன் இணைக்கும் வகையிலும் செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்கா டாலரின் பொருளாதாரத்தை எட்டுவதற்கு இது ரொடு மேப் தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த மன்றமானது அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயல்படும், ஏனெனில் இது கூட்டுறவு நிறுவனங்களின் பிரச்சனைகளை நேரடியாக அரசாங்கத்திற்குத் தெளிவாக விளக்குவதன் மூலம் அதற்கான தீர்வினை விரைவாகக் காணமுடியும் என்றும் கூறினார். மேலும் இது தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்குச் சர்வதேச அமைப்புகள் மற்றும் பல தேசிய சமூகங்களுடன் CDF இணைந்து செயல்படும் என்று பிரபு கூறினார்.