மகாராஷ்டிராவில் நிலையாக உள்ள பழம் மற்றும் காய்கறிகளின் தேவை!

Update: 2021-04-11 06:54 GMT

கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாடு முழுவதும் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை விதித்து வருகின்றனர். பொது மக்களும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப விதிமுறைகளை கடைப்பிடிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.


மும்பை, புனே மற்றும் மகாராஷ்டிராவில் பிற பகுதிகளில் ஓரளவு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த போதிலும், பல பகுதிகளில் உணவு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விற்பனை நிலையாகவும் அல்லது குறைவாகவும் உள்ளது.

கடந்த ஆண்டு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த போது ஏப்ரல் மாதத்தில் பருப்புகள், அரிசிகள், மாவு மற்றும் பிற உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்காக இருந்தது. இதற்குக் காரணம் போது மக்கள் ஊரடங்கு பீதியில் வாங்கி குவிக்கத் தொடங்கியதால் ஏற்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரலில் தேவை குறைந்துள்ளது.

மக்களிடையே அத்தியாவசிய தேவைகள் தொடர்ந்து செயலில் இருக்கும் என்று தெரிவித்த நிலையில் மக்களிடையே பீதி குறைந்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.


மகாராஷ்டிராவில் சில பகுதியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு பிறகு பருப்புகள், அரிசிகள், தானியங்கள், கோதுமை மாவு உள்ளிட்டவற்றின் மும்பையில் விற்பனை குறித்து வேளாண் உற்பத்தி குழுவின் இயக்குநர் நிலேஷ் வீராவிடம் கேட்டபொழுது, கிரானா கடைகளில் வாடிக்கையாளர்களின் தேவை திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

source: https://economictimes.indiatimes.com/news/economy/agriculture/demand-for-fruits-veggies-stable-in-maha/articleshow/81976555

Similar News