வேலைகள் குறித்த ஐந்து வித கணக்கெடுப்புகளை ஏழு மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசுத் திட்டம்!

Update: 2021-04-11 10:50 GMT

அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பணிப்பெண்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் டேட்டாக்களை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசாங்கம் ஐந்து வகையான கணக்கெடுப்பினை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வினை ஏழு மாதத்திற்குள் முடிக்கத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.


தொழிலாளர் பணிக்கத்தின் இயக்குநர்(DG) D.P.S, "இந்த ஐந்து ஆய்வுகளின் முடிவுக்குப் பிறகு நாட்டில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்பின் நிலைமை மாற்றப்படும். அரசு எந்தவொரு கொள்கையையும் கொண்டுவர டேட்டா தேவைப்படுகின்றது. இந்த ஆய்வுகள் அனைத்து அமைப்புசாரா துறைகளின் வல்லுநர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் டேட்டாக்களை வழங்கும் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த கொள்கைகளை உருவாக்க அரசாங்கத்திற்கு உதவுகிறது," என்று அது தெரிவிக்கின்றது.

இந்த ஆய்வானது ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் 10 அல்லது 10க்கும் மேற்பட்ட புலப்பெயர் தொழிலாளர்களைப் பணி அமர்த்திய அமைப்பின் காலாண்டு கணக்கெடுப்பில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் மூன்று கணக்கெடுப்புகளை கட்ட வாரியாக முடிக்கப்படும். அனைத்து ஐந்து ஆய்வும் தற்போது நவம்பரில் முடிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள கொரோனா சூழ்நிலை இந்த ஆய்வை பாதிக்காத என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை விதித்துள்ளது. ஆய்வு காலை நேரத்தில் எடுக்கப்படும் எனவே இது பாதிக்காது. இருப்பினும் நிலைமை மோசமடைந்தால் அதற்கேற்றவாறு செயல்படுவோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் சர்வதேச வல்லுநர்களும் மற்றும் பொருளாதார வல்லுநர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வு முழுவதையும் Dr S.P. முக்ஹெர்ஜீ மற்றும் Dr அமிதாப் குண்டு ஆகியோரின் தலைமையின் கீழ் வல்லுநர் குழு இயங்கும். வல்லுநர் குழுவின் 46 கூட்டங்களுக்குப் பிறகு ஐந்து கணக்கெடுப்புகளுக்கான உத்திகள் முடிவு செய்யப்படும் என்று DG தெரிவித்தார்.

கணக்கெடுப்பை நடத்தும் அணிகளுக்கு மூன்று நாட்கள் பயிற்சிகளைத் தொழிலாளர் பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளும் அனைத்து 2,500 ஆசிரியர்களுக்கும் ஏப்ரல் 12 முதல் இணையவழி பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.

தற்போது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இந்த ஆய்வு மூலம் அரசாங்கம் புதிய வேலைவாய்ப்பு கொள்கையைத் தயாரிக்கும் என்று எதிர்ப்பாக்கப்படுகின்றது.


இந்த ஐந்து ஆய்வுகளும் அகில இந்தியப் புலம்பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு, அகில இந்திய உள்நாட்டுத் தொழிலாளர்கள் கணக்கெடுப்பு, வல்லுநர்களின் கீழ் இந்திய வேலைவாய்ப்பு, போக்குவரத்துக்கு துறையில் அகில இந்திய வேலைவாய்ப்பு கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்குகின்றது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/govt-to-complete-5-surveys-in-7-months-on-jobs-labour-bureau-dg/articleshow/82013198.cms

Similar News