ஐக்கிய ஒன்றியத்துடன் முதலீடு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எதிர்பார்ப்பு!
செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஸ் கோயல், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முதலீடு வசதி மற்றும் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் குறித்துப் பேச இந்தியா ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார். இரு தரப்பினருக்கும் சமமான விளைவினை பெற வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும் இரு தரப்பினருக்கும் கட்டணமில்லாத தடைகளை உறுதி செய்து கோயல் ஆரம்பக்கால உடன்படிக்கைக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஐக்கிய அரபு நாடுகளின் தூதர்களுடன் உரையாற்றும் போது கோயல் குறிப்பிட்டார்."இந்தியா மற்றும் ஐரோப்பா ஒன்றியத்துக்கு இடையேயான முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியா எதிர்நோக்குகிறது," என்று அவர் கூறினார். மேலும் உலகில் 80 நாடுகளுக்கு இந்தியா 65 மில்லியன் கொரோனா தடுப்பூசியை இந்தியா வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியா உலக வர்த்தக அமைப்பிடம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு TRIPS தள்ளுபடி செய்ய முன்மொழிந்துள்ளதாகவும், இதனால் மக்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தயாரிப்புகளை விரைவில் அணுக முடியும் என்று அவர் கூறினார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கீட்டர்களாவும் மற்றும் முதலீட்டாளர்களின் ஒருவராகவும் உள்ளது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/india-looks-forward-to-advance-talks-for-investment-facilitation-pact-with-eu-piyush-goyal/articleshow/82055027.cms