அமித்ஷா மேற்கு வங்காள பிரச்சாரம் குறித்து தவறாக வைரலாக்கப்பட்டு வரும் புகைப்படம்!

Update: 2021-04-15 01:00 GMT

உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்காளத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தவறாக மார்பிங் செய்து அவர் கொல்கத்தாவில் சோனகாச்சி பகுதிக்குச் சென்றதாகத் தவறாகக் குற்றம் சாட்டி சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.


உண்மையான புகைப்படத்தில் சோனகாச்சி என்ற முகவரி குறிப்பிடப்படவில்லை மற்றும் அது பாரதீய ஜனதா கட்சி பாபணிபுரியில் வீடு வீடாகச் சென்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்டது.

இதே புகைப்படம் பேஸ்புக்கில் பகிர்ந்து ஷா சோனகாச்சியில் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. மேலும் இதே புகைப்படம் பல டிவிட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டது.

இதுபோன்று மார்பிங் ஊடகங்களில் வலம்வந்தாலும், இதன் உண்மை புகைப்படத்தை ஏப்ரல் 9 இல் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில், "பாபணிபுரியில் வீடுவீடாக சென்று பிரச்சாரம்," என்று குறிப்பிட்டிருந்தார்.


மேலும் இந்த புகைப்படம் குறித்த இருப்பிடத்தைக் கண்டறிந்த போது கொல்கத்தாவில் பாபணிபுரியில் என்று அடையாளம் காணப்பட்டது.


 எனவே அமித்ஷா பாபணிபுரியில் பிரச்சாரம் மேற்கொண்ட புகைப்படத்தைத் தவறாக மாற்றி அவர் கொல்கத்தாவில் சோனகாச்சி பகுதிக்குச் சென்றதாகத் தவறாக வைரலாகி வருகின்றனர்.

source: https://www.thequint.com/news/webqoof/amit-shah-image-edited-to-claim-he-visited-sonagachi-area-in-west-bengal#read-மோர் 

Similar News