இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிதியமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இதுவரை இல்லா தளவுக்குச் சரக்கு மற்றும் சேவை வரி(GST) வசூல் 1,23,902 லட்சம் கோடியை எட்டியுள்ளது. மாத கணக்கீட்டின் படி, பிப்ரவரி மாதத்தில் 1,13,143 லட்சம் கோடியாக இருந்த GST வசூல் மார்ச் மாதத்தில் 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
"GST வசூல் கடந்த ஆறு மாதங்களாக 1 லட்சம் கோடிக்கு மேல் தாண்டியுள்ளது. இது தொற்றுநோய் காலங்களுக்குப் பிறகு பொருளாதார மீட்சியைக் காட்டுகின்றது," என்று நிதியமைச்சகம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும் CGST க்கு 21,879 கோடியையும், IGST யில் SGST க்கு 17,230 கோடியையும் வழக்கமான தீர்வாக அரசாங்கம் தீர்த்து வைத்ததது. மேலும் கூடுதலாக, மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு IGST தற்காலிக தீர்வாக 50:50 என்ற விகிதத்தில் 28,000 கோடியை மத்திய அரசாங்கம் நிர்ணைத்துள்ளது.
மார்ச் 2021 இல் மொத்த வருவாயில் தற்காலிக மற்றும் வழக்கமான தீர்வாக மத்திய மற்றும் மாநில CGST க்கு 58,852 கோடியும் மற்றும் SGST க்கு 60,559 கோடியும் ஆகும். மேலும் மார்ச் மாதத்தில் இழப்பீடாக 30,000 கோடியை மத்திய அரசாங்கம் வழங்கியது.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மார்ச் 2021 இல் வசூலிக்கப்பட்ட மொத்த GST வருவாய் 1,23,902 லட்சம் கோடியாகும். இதில் CGST வசூல் 22,973 ஆகும் மற்றும் SGST வசூல் 62,842 கோடியாகும்.
GST முறை அரசாங்கத்தால் அமல்படுத்தியதில் இருந்து மார்ச் 2021 GST வசூலே உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக GST வருவாய் மீட்டெடுக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 27 சதவீதம் அதிகமாக உள்ளது.