கோவிட்-19 தொடர்பான நிவாரண பொருள் இறக்குமதிக்கு IGST யை தள்ளுபடி செய்தது மத்திய அரசு.!

Update: 2021-05-04 00:30 GMT

திங்கட்கிழமை அன்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொடர்பான நிவாரண பொருட்களை இறக்குமதி செய்வது மற்றும் இலவச விநியோக பொருட்களை இந்தியாவுக்கு வெளியில் இருந்து பெறுவது போன்றவட்டிற்கு ஒருங்கிணைந்த GST (IGST) ஜூன் 30 ஆம் தேதி வரை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது.



கொரோனா நிவாரண பொருட்களை இறக்குமதி செய்வதில் IGST யை விலக்க இந்தியாவுக்கு வெளியே உள்ள தொண்டு நிறுவனங்கள், கார்பொரேட் நிறுவனங்கள், பிற சங்கங்களிடம் இருந்து அரசாங்கத்திற்குக் கோரிக்கை வந்ததாக நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதனை அடுத்து மத்திய அரசாங்கம் கொரோனா தொடர்பான நிவாரண பொருட்களின் இறக்குமதிக்கு IGST யில் இருந்து விலக்கு அளித்துள்ளது எது ஜூன் 30 வரை பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விலக்கு ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட துறைமுகங்களில் உள்ள பொருட்களுக்கும் அடங்கும்.

திங்கட்கிழமை அன்று விலக்கு அளிக்கப்பட்ட IGST மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இந்த பொருட்களை மாநில அரசாங்கம் இலவசமாக இறக்குமதி செய்யலாம், இந்தியாவில் அனைத்து இடங்களுக்கும் இது அங்கீகரிக்கப்படும்.

சுங்கவரியிடம் இருந்து பொருட்களை அகற்றுவதற்கு முன்பு இறக்குமதியாளர்கள் கொரோனா நிவாரண பொருட்களுக்கான சான்றிதழை நோடல் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான சான்றிதழ் மாநிலத்தில் உள்ள நோடல் அதிகாரிகள் வழங்குவர்.


கடந்த வாரம் ஆக்சிஜென் இறக்குமதிக்கான IGST யை 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக மத்திய அரசாங்கம் குறைத்தது. இது ஜூன் 30 வரை பொருந்தும் என்றும் தெரிவித்தது.

source: http://www.businessworld.in/article/Govt-Waives-IGST-On-Import-Of-COVID-Relief-Material-Received-As-Donation-For-Free-Distribution/03-05-2021-388476/

Similar News