கோவிட்-19 கட்டுப்படுத்த தன்னார்வ நடவடிக்கைகளை இந்தியா Inc எடுக்க வேண்டும் - உதய் கோடக்.!

Update: 2021-05-04 10:25 GMT

அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்று கூறிய ஒரு நாள் கழித்து, தொழில் நிறுவனங்கள் தன்னார்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று CII தலைவர் உதய் கோடக் திங்கட்கிழமை அன்று தெரிவித்தார்.


பணியிடங்களில் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் இந்தியாவில் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசியமற்ற பொருளாதார நடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொழில்துறைகளில் நடவடிக்கையில் மறு ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் ஊழியர்களின் தேவைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தொழித்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோடக் மேற்கோள்காட்டித் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனா தொற்றை எதிர்கொள்ள CII மற்றும் தொழில்துறை தோளுக்குத் தோளாக உழைத்து வருவதாக தொழில்துறை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா முயற்சிகளையும் மீறித் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மாருதி சுசுகி, மோட்டோகார்ப், JCB இந்தியா, MG மோட்டர், ஹோண்டா மோட்டார் சைக்கிள் போன்ற ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் போன்றவை தற்காலிக உற்பத்தியை நிறுத்தியுள்ளது. கோடக் மகேந்திர பேங்க், TCS மற்றும் இன்போசிஸ் போன்றவை வீட்டிலிருந்தே பணியாளர்களை வேலை செய்வதற்கு வலியுறுத்தியுள்ளது.


மேலும் பணியிடங்களில் ஊழியர்களுக்குச் சோதனையைச் செய்வதற்கும் மற்றும் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தனிமைப்படுத்த வசதிகளை ஏற்பாடு செய்து தரவும் CII கேட்டுக்கொண்டது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/uday-kotak-urges-india-inc-to-take-voluntary-measures-to-control-spread-of-covid-19/articleshow/82374809.cms

Similar News