மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2020-21 ஆண்டின் நிதிப் பற்றாக்குறை 9.3 சதவீதம்- CGA!

Update: 2021-05-31 12:46 GMT

CGA வெளியிட்ட தரவுகளின் படி, 2020-21 ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.3 சதவீதமாக உள்ளது. இது திருத்தப்பட்ட பட்ஜெட்டில் நிதி அமைச்சகம் மதிப்பிடப்பட்ட 9.5 சதவீதத்தை விடக் குறைவாகும்.


2020-21 ஆண்டிற்கான மத்திய அரசின் வருவாய் அறிக்கைகளை வெளியிட்ட, CGA நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை 7.42 சதவீதமாக உள்ளது என்று திங்களன்று தெரிவித்தது. முழுமையாக நிதிப் பற்றாக்குறை 18,21,461 கோடியாக உள்ளது. இந்த நிதியாண்டில், பிப்ரவரி 2020 இல் முன்வைக்கப்பட்ட வரவு செலவுகளில் நிதிப் பற்றாக்குறை 7.96 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக அரசாங்கம் முன்னர் நிர்ணயித்தது.

கொரோனா தொற்றால் செலவுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2021-22 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்டங்களைத் திருத்தப்பட்ட கணக்கீடு படி, மார்ச் இறுதியில் முடிவடைந்த நிதியாண்டில் 18,48,655 கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமாக 9.5 சதவீதமாக மதிப்பீடு செய்தது.


2019-20 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதமாக உயர்ந்தது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/indicators/indias-2020-21-fiscal-deficit-at-9-3-of-gdp/articleshow/83113133.cms

Similar News