மே 28 GST கவுன்சில் கூட்டத்தை நடத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடத்த முடிவு.!
சரக்கு மற்றும் சேவை வரிக்கான அடுத்த கூட்டத்தை மே 28 இல் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் நடத்த முடிவு செய்துள்ளதாகச் சனிக்கிழமை அன்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
"2021 மே 28 டெல்லியில் காலை 11 மணிக்கு 43 வது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடத்தப்படும்," என்று அந்த டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் மாநில நிதி அமைச்சர்களின் கோரிக்கைகளை அடுத்து ஆறு மாத கால இடைவெளிக்குப் பின்பு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் மேற்கு வங்காள நிதியமைச்சர் அமித் மித்ரா GST கவுன்சில் கூட்டத்தை அவசரமாக நடத்த நிர்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1.56 லட்ச கோடி இழப்பீட்டை அதிகரிப்பது குறித்துப் பேசக் கூட்டத்தை நடத்துமாறு அதில் கேட்கப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கத்தைக் குறித்து முன்னர் கருத்தில் கொள்ளாதலால் 1,56,164 கோடி இழப்பீடாகக் கணக்கிடப்பட்டது. "தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக உள்ளதால் இழப்பீடு நிதி திட்டமிட்டதை விட அதிகமாக இருக்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிதியாண்டில் GST இழப்பீட்டை ஈடுசெய்ய 1.1 லட்சம் கோடியை அடுத்து அடுத்து கடனாக வழங்கியது. நிதியாண்டு 21 இல் GST இழப்பீடாக 63,000 கோடி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலுவையில் உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.