ஒரு வருடத்தில் மாநிலங்களுக்கு 30,000 கோடி பேரிடர் நிதி மத்திய அரசு வழங்கல்.!
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுநோய் பரவிய தொடக்கத்தில் இருந்து மத்திய அரசாங்கம் மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் 30,000 கோடிக்கு மேலாகப் பேரிடர் மீட்பு நிதிகளை வழங்கியுள்ளது. இந்த நிதியின் 50 சதவீதம், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைப்பது, மருத்துவ பொருட்கள் வாங்குவது, ஆம்புலன்ஸ் வழங்குவது, தொற்றைச் சோதனை செய்து மற்றும் கண்டறிதல் போன்ற செலவுகளும் இதில் அடங்கும்.
மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் அதிக பங்கினை மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் பெற்றுள்ளன. இதில் 8,257 தேசிய பேரிடர் மேலாண்மை நிதியும் அடங்கும். மார்ச் 31 வரை மத்தியப் பிரதேசம் 3,700 கோடி நிதியைப் பெற்றுள்ளது, மகாராஷ்டிரா 3,640 கோடியும் மற்றும் மேற்கு வங்காளம் 3,260 கோடியும் பெற்றுள்ளது.
2020-21 நிதியாண்டில் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 31,500 கோடிக்கு மேலாக நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் 7000 கோடி பேரிடர் நிதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியிட்ட உத்தரவில், "தற்போது அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு, மாநிலங்கள் SDRF யில் 50 சதவீதத்தைத் தொற்று நடவடிக்கைக்குப் பயன்படுத்தக் கூறப்பட்டிருந்தது."
SDRMF மூலம் மாநிலங்களுக்குப் பேரிடர் நிதி வழங்கியதில், மத்திய அரசாங்கம் 22,184 கோடி பங்கினை அளித்துள்ளது, இது அதற்கு முந்தைய ஆண்டை விட 114 சதவீதம் அதிகமாகும். மேலும் கூடுதலாக NDRF மூலம் 8,257 கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
SDRMF மற்றும் NDRF மூலம் ஒத்துப்பட்ட நிதியின் கீழ் மாநிலங்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் கொரோனா தொற்றை "பேரழிவு" என்று அறிவித்தது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/rs-30000-cr-of-disaster-funds-given-to-states-in-one-year/articleshow/82174744.cms