ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 30.21 பில்லியன் டாலராக உயர்வு!

Update: 2021-05-03 01:00 GMT

வர்த்தக அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10.17 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்ததை விட இந்த ஆண்டு அதே ஏப்ரல் மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்து 30.21 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இறக்குமதியும் கடந்த மாதத்தை விட 45.45 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 17.09 டாலராக இருந்தது.

"ஏப்ரல் மாதத்தில் இந்திய இறக்குமதியாளராக 15.24 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் 6.92 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வர்த்தக பற்றாக்குறையை விட 120.34 சதவீதம் அதிகரித்துள்ளது," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக 2020 ஏப்ரலில் ஏற்றுமதி 60.28 சதவீதமாக குறைந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் வர்த்தகம் 60.29 சதவீதம் அதிகரித்து 34.45 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

மேலும் எண்ணெய் இறக்குமதி ஏப்ரல் 2021 இல் 10.8 பில்லியன் டாலராக உள்ளது, இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.65 பில்லியன் அமெரிக்க டாலரை விட அதிகமாகும்.


மேலும் ஏப்ரல் மாதத்தில் நகை, சணல், கார்பெட், லெதர், கைவினை பொருட்கள், எண்ணெய், முந்திரி,பொறியியல், பெட்ரோலிய பொருட்கள், கடல் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளிட்டவை அதிக வளர்ச்சியை கண்டுள்ளது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/india-april-trade-deficit-at-15-24-billion/articleshow/82351264.cms?UTM_Source=Google_Newsstand&UTM_Campaign=RSS_Feed&UTM_Medium=Referral

Similar News