நடப்பு பருவத்தில் சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியத்தை 31.4 சதவீதம் குறைத்தது மத்திய அரசு.!
இந்தியாவில் நடப்பு பருவ காலம் செப்டம்பரில் முடிவடைவுள்ள நிலையில், இந்த பருவ காலத்தில் ஏற்றுமதி செய்யப்படும் சர்க்கரையின் மானியத்தை 31.4சதவீதமாக மத்திய அரசாங்கம் குறைந்துள்ளதாக வியாழக்கிழமை அன்று நுகர்வோர் விவரம், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலை அடுத்து உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளரான இந்தியா, நடப்பு பருவத்தில் 6 மில்லியன் டன் சர்க்கரையை ஏற்றுமதியில் பணப்பட்டுவாடா செய்ய ஆலைகளை ஊக்குவிப்பதற்காக, ஒரு டன் சர்க்கரைக்கு இந்திய ரூபாயில் 5,833 மானியத்துக்கு ஒப்புதல் அளித்தது.
தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியத்தை 4,000 ரூபாயாக உள்ளது என்று நுகர்வோர் விவரம், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்கு 5,833 மானியத்துக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து வெளிநாட்டு ஏற்றுமதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மானியத்தின் உதவியுடன், வர்த்தகர்கள் 5.7 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு நடப்பு பருவத்தில் ஒப்பந்தம் அளித்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Inputs from Business Today