மே மாதத்தில் பொறியியல், மருந்து, பெட்ரோலியம் மற்றும் ரசாயனம் போன்ற துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால் இந்திய ஏற்றுமதி 67.39 சதவீதம் அதிகரித்து 32.21 பில்லியன் ஆக உள்ளது என்று புதன்கிழமை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு மே மாதத்தில் ஏற்றுமதி 19.24 பில்லியன் டாலராக இருந்தது, மேலும் இது 2019 இல் 29.85 பில்லியன் டாலராக இருந்தது என்று வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இறக்குமதி 68.59 சதவீதம் உயர்ந்து 38.53 பில்லியன் டாலராக இருந்தது. இது 2020 மே இல் 22.86 பில்லியன் டாலராக இருந்தது.
"இந்திய மே 2021 இல் நிகர இறக்குமதியாளராக வர்த்தக பற்றாக்குறையில் 6.32 பில்லியன் டொலர், இது கடந்த ஆண்டை விட அதிகமாக இருந்தது," என்று அமைச்சகம் தெரிவித்தது. மேலும் எண்ணெய் இறக்குமதி மாதாந்திர மதிப்பீட்டின் படி, 9.45 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு மே 2020 இல் 3.57 பில்லியன் டாலராக இருந்தது.
இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 62.84 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 2020 இல் 29.6 பில்லியன் டாலராக இருந்தது மற்றும் 2019 இதே காலப்பகுதியில் 89.07 பில்லியன் டாலராக இருந்தது.
Source: https://www.ndtv.com/business/exports-jump-to-32-21-billion-in-may-trade-deficit-at-6-32-billion-2454588