வருவாய் பற்றாக்குறை மானியத்தின் 4வது தவணையாக ₹9,871 கோடி வழங்கும் மத்திய அரசு!
வருவாய் பற்றாக்குறை மானியத்தின் நான்காவது மாத தவணையை 17 மாநிலங்களுக்குப் பகிர்வாக 9,871 கோடியைப் புதன்கிழமை அன்று வெளியிட்டது மத்திய அரசாங்கம்.
நான்காவது மாத தவணை வெளியீட்டைத் தொடர்ந்து, இந்த நிதியாண்டிற்கு மொத்தம் 39,484 கோடியை பல்வேறு மாநிலங்களுக்குப் பகிர்வு பற்றாக்குறை மானியமாக வெளியிடப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அன்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சகம் தெரிவித்துள்ளபடி, மாநிலங்களுக்கு சட்டம் 275 கீழ் வருவாய் பற்றாக்குறை மானியத்தை வழங்கிவருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த பகிர்வானது, மாநிலங்களின் வருவாய் கணக்குகளுக்கு இடையே உள்ள இடைவெளியைப் பூர்த்தி செய்வதற்காக பதினைந்தாம் நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, மாத தவணை முறைகளில் வெளியிடப்படுகின்றது. 2021-22 நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு PDRD மானியத்துக்கு ஆணையம் பரிந்துரை செய்தது.
மாநிலத்தின் வருவாய் மதிப்பீடு மற்றும் செலவினங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியின் அடிப்படையில் மானியத்துக்குத் தகுதியான மாநிலங்களை ஆணையம் முடிவு செய்தது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2021-22 நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு மொத்தம் 1,18,452 கோடியை வழங்குவதற்காக பதினைந்தாவது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த மொத்த பணத்தில் தற்போது நான்காவது தவணையாக 39,484 கோடியை வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம், அசாம், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடக, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தராகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் முதலியவை PDRD மானியத்திற்கு பதினைந்தாவது நிதி ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களாகும்.
Source: ஸ்வராஜ்யா