கொரோனா தொடர்பான நடவடிக்கைகளுக்கு 50,000 கோடி கால பணப்புழக்க வசதியை RBI அறிவிப்பு!
அதிகரித்து வரும் கொரோனா தொற்றுநோயின் அவசர மருத்துவ சேவைகளுக்கு நிதியை எளிதாக்குவதற்கு 50,000 கோடி கால பணப்புழக்க வசதியை வழங்குவதாக ரிசெர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். இந்த பணப்புழக்க ஆதரவானது, இந்தியா கொரோனா தொற்றின் முக்கிய மையப்புள்ளியாக மாறி சுகாதார அமைப்புக்கு நெருக்கடிக்குத் தள்ளிய நிலையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணப்புழக்க திட்டத்தின் மூலம், தடுப்பூசி உற்பத்தியாளர்கள், மருத்துவ சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகள் முதலியவற்றை வங்கி ஆதரிக்கும். இந்த நிதி மூன்று ஆண்டு வரை வழங்கப்படும். வங்கிகள் கொரோனா கடனுக்கு நிகராக 40 புள்ளிகள் அடிப்படையில் சிறப்புக் கடன் புத்தகத்தை அமைக்கும்.
கொரோனா தொற்றிலிருந்து இந்தியா மீண்டெழுவது குறித்து நம்பிக்கை தெரிவித்த சக்தி காந்த தாஸ், நிலைமையைத் தொடர்ந்து RBI கண்காணித்து வரும் என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு நாளைக்கு 3 லட்சம் புதிய பாதிப்புகளையும் மற்றும் 3000 இறப்புகளையும் பதிவு செய்கிறது, இது சுகாதார அமைப்பைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இந்தியா ஏற்கனவே 2 கோடிக்கும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பிற நடவடிக்கைகளைத் தவிர RBI, சிறு நிதி வங்கிகளுக்கு 10,000 கோடியை நீண்டகால நிதி இலக்காக வைத்துள்ளது. இந்த நிதியைக் கடன் வாங்குபவர்களுக்கு 10 லட்சம் வரை நிதியை வழங்க முடியும்.
source: https://www.ndtv.com/business/rbi-governor-shaktikanta-das-announces-term-liquidity-facility-of-rs-50-000-crore-2428339