அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை இரண்டுமடங்கு அதிகரிக்கப் பஞ்சாப் 6வது ஊதியக்குழு பரிந்துரை!

Update: 2021-05-05 06:36 GMT

பஞ்சாபின் ஆறாவது ஊதிய குழு, அனைத்து மாநிலத்தின் அரசாங்க ஊழியர்களுக்கு இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தவும் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 6,950 முதல் 18,000 ஆக உயர்த்த பரிந்துரை செய்ததாகவும் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையக் குழுவின் இந்த பரிந்துரை 2016 இல் இருந்து 3,500 கோடி செலவுக்கு வழிவகுக்கும் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.


சராசரி ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய அதிகரிப்பு 20 சதவீதம் எதிர்ப்பாக்கப்படுகின்றது, இது ஐந்தாவது ஊதியக்குழுவின் பரிந்துரையை விட 2.59 மடங்கு சம்பளம் அதிகரிக்கும் என்றும் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். தற்போது ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி, அனைத்து கொடுப்பனவும் திருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் முதலமைச்சர் அமரீந்தர் சிங்க்கு வழங்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, தெளிவான ஆய்வுக்காக நிதியமைச்சகத்துக்கு வழங்கப்படும் மற்றும் இந்த மாதம் அமைச்சரவை முன் வைக்க மேற்கொண்ட நடவடிக்கை அது வைத்து எடுக்கப்படும்.

இந்த அறிக்கையானது ஏற்கனவே கொரோனா தொற்றால் வரி வசூல் சரிவு மற்றும் IGST இழப்பீடு அடுத்தாண்டு முடிவடையவுள்ள நிலையில் மாநிலத்தின் பொருளாதாரம் ஆழமாக நெருக்கடியில் உள்ள நிலையில் வந்துள்ளது. மேலும் அமைச்சகத்துக்கு முன்பு இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் முன்னர் நிதியமைச்சகம் இதன் தாக்கத்தை முழுமையாக ஆராயும்.

மேலும் ஓய்வூதியத்தை 40 சதவீதமாக மீட்டெடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும் HRA நகரக் கொடுப்பனவில் ஏற்கனவே உள்ளதைத் தக்கவைக்க முன்மொழிந்தாலும், பல புதிய கொடுப்பனவைக் கொண்டுவரப் பரிந்துரை செய்துள்ளது.


முன்னாள் IAS அதிகாரி ஜெய் சிங் கில் தலைமையில் மாநில அரசாங்கத்தால் பிப்ரவரி 24 2016 இல் ஆணையம் தொடங்கப்பட்டது. இது தன் அறிக்கையை ஏப்ரல் 30 2021 இல் சமர்ப்பித்தது.

Source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/punjabs-6th-pay-commission-recommends-2-fold-increase-in-salaries-for-govt-employees/articleshow/82390240.cms

Similar News