நிதியமைச்சரின் 6.29 லட்சம் கோடி கொரோனா நிவாரண தொகுப்புக்கு அமைச்சரவை ஒப்புதல்!
கொரோனா தொற்றால் பாதிப்படைந்த பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 6.29 லட்சம் கோடி நிவாரண தொகுப்புக்குப் புதன்கிழமை அன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
இந்த நிவாரண தொகுப்பின் ஒரு பகுதியாகத் திங்களன்று சீதாராமன், சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு 1.5 லட்சம் கோடி கடன் தொகுப்பு, சுகாதாரத் துறைக்குக் கூடுதல் கடன், சுற்றுலாத்துறைக்குக் கடன், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா கட்டணம் போன்றவற்றையும் அவர் அறிவித்தார். இதில் ஏற்கனவே அறிவித்த நவம்பர் வரை ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்கான 93,869 கோடி போன்றவையும் உள்ளது.
மேலும் கொரோனா தொற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் எந்தவொரு நிலையைச் சமாளிப்பதற்கு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பதற்காக நிதியமைச்சர் கூடுதல் 23,220 கோடியை வழங்கினார். மேலும் மார்ச் 2022 வரை செய்யப்படும் அனைத்து புதிய ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர்களின் வைப்பு நிதிக்குச் செலுத்தவும் அரசாங்கம் உறுதியளித்தது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட சுற்றலா துறைக்கு நிதி ஆதரவும் அறிவிக்கப்பட்டது.
இதுதவிர, கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையப் பாதுகாப்பை வழங்குவதற்காகக் கூடுதலாக 19,041 கோடி, PLI திட்டத்திற்கான காலத்தை ஒருவருடத்திற்கு நீட்டிப்பு மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு 88,000 கோடி காப்பீட்டுத் தொகை முதலியவையும் அடங்கும்.
மேலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் வீழ்ச்சியைத் தொடர்ந்து, மீண்டும் மாநிலங்கள் கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் இந்த ஆதரவை வழங்கியுள்ளது.
source: https://www.timesnownews.com/business-economy/economy/article/cabinet-approves-rs-6-29-lakh-crore-covid-19-relief-package-announced-by-fm/778500