ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக 75 லட்ச வேலை இழப்புகள், வேலைவாய்ப்பின்மை உயர்வு - CMIE தலைவர்!

Update: 2021-05-05 01:00 GMT

தற்போது நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் 75 லட்சம் வேலையே பாதித்துள்ளது, இது தொடர்ந்து வேலைவாய்ப்பின்மை விகிதத்தை 8 சதவீதம் உயர்த்தியுள்ளது என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம்(CMIE) திங்கட்கிழமை தெரிவித்தது.


வேலைவாய்ப்புக்கான முன்னிலை தொடர்ந்து சவாலாக இருக்கும் என்று எதிர்ப்பாகப்படுகின்றதாக CMIE யின் நிர்வாக இயக்குநர் மகேஷ் வியாஸ் தெரிவித்தார்.

"மார்ச் மாதத்தோடு ஏப்ரலை ஒப்பிடுகையில் 75 லட்ச வேலைகளை இழந்துவிட்டோம். இதுவே வேலைவாய்ப்பின்மை சதவீதத்தில் அதிகம் கொண்டு சென்றுள்ளது," என்று அவர் தெரிவித்தார். மத்திய அரசு வெளியிட்ட தகவலின் பேரில் 7.97 சதவீத தேசிய வேலைவாய்ப்பின்மை உள்ளது, இது நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகவும் மற்றும் கிராமப்புறங்களில் 7.13 சதவீதமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் தேசிய வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.50 சதவீதமாக இருந்தது, கிராம மற்றும் நகர்புறங்களிலிலும் குறைவாகவே இருந்தது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இதனால் வேலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. "கொரோனா தொற்றின் உச்சத்தைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் வேலைவாய்ப்பு மீதுள்ள அழுத்தத்தைக் காணமுடிகிறது," என்று வியாஸ் தெரிவித்தார்.

முதலில் நாடு தழுவிய ஊரடங்கு விதிக்கப்பட்ட போது வேலைவாய்ப்பின்மை சதவீதம் 24 ஆக இருத்தது, அப்போதிருந்தது போல இப்போது நிலைமை மோசமாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.


நாட்டில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் புதிய தொற்றுகளையும் மற்றும் 3000 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை இறுதி முடிவாக எடுக்குமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டார்.

source: https://www.financialexpress.com/economy/75-lakh-people-lose-jobs-in-april-as-lockdowns-sprout-unemployment-at-a-4-month-high-cmie-chief/2245201/

Similar News