பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 9.5 கோடி விவசாயிகளுக்கு எட்டாவது தவணை 20,000 கோடிக்கு மேல் பிரதமர் வெளியீடு.!

Update: 2021-05-14 08:19 GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை 9.5 கோடி விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின்(PM-KISAN) கீழ் எட்டாவது தவணை நிதியாக 20,000 கோடிக்கு மேலாக வெளியிட்டார்.




 இந்த தவணை நிதியை வீடியோ கான்பிரென்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். "இந்த தவணையில் 20,000 கோடிக்கு மேல் 9.5 கோடி விவசாய குடும்பங்களுக்குப் பயனளிக்க வெளியிடவுள்ளது," என்று பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளிவந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பங்கேற்றார். இந்த திட்டத்தில் மேற்கு வங்காள விவசாயிகள் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர்.

PM-KISAN நிதி திட்டத்தின் கீழ், பயன்பெறும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6,000 வழங்கப்படுகின்றது. இது நான்கு மாத தவணைகளில் 2,000 ஆக வழங்கப்படுகின்றது.

பயனாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக இந்த பணம் அனுப்பப்படுகின்றது. இந்த திட்டம் பிப்ரவரி 24, 2019 இல் தொடங்கப்பட்டது இதுவரை 1.15 லட்சம் கோடி விவசாய குடும்பங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




 இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேசம், ஜம்மு&காஷ்மீர், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேகாலயாவில் இருந்து பயன்பெறும் விவசாயிகளுடன் பிரதமர் உரையாற்ற உள்ளார்.


source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/pm-releases-8th-installment-worth-over-rs-20000-cr-to-9-5-cr-farmers-under-pm-kisan/articleshow/82626418.cms

Similar News