ஆம்போடெரிஸின்-B மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை.!

Update: 2021-06-02 02:00 GMT

தற்போது இந்தியாவில் கருப்பு பூஞ்சை அதிகரித்துள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று ஆம்போடெரிஸின்-B ஊசியை ஏற்றுமதி செய்வதற்குத் தடையை விதித்துள்ளது இந்திய அரசாங்கம். கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆம்போடெரிஸின்-B சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


நாட்டில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சையால் ஆம்போடெரிஸின்-B ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக அமைப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சையால் ஆம்போடெரிஸின்-B தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் சில மாநிலங்களில் அதற்கான தட்டுப்படும் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் இந்தியாவில் ஆம்போடெரிஸின்-B ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த கிலியட் சயின்ஸ் 1 மில்லியன் ஆம்போடெரிஸின்-B யை வழங்கும் என்றும் எதிர்ப்பாகப்படுகின்றது.

மேலும் ஆம்போடெரிஸின்-B GST விலக்கு பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது மே 28 நடந்த 43 வது GST கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அது குறித்த செய்தி அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.


மேலும் GST கவுன்சில் கொரோனா நிவாரண பொருட்களுக்கும் விலக்கு வழங்கியுள்ளது. மேலும் இந்த பொருட்களுக்கான இறக்குமதி விலக்கானது ஆகஸ்ட் 31 2021 வரை இருக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது.

Source: பிசினஸ் டுடே

Tags:    

Similar News