கொரோனா தாக்கத்தை எதிர்கொள்ள நிதி தொகுப்பை வழங்க CII தலைவர் உதய் கோடக் வலியுறுத்தல்!

Update: 2021-05-27 06:28 GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவலில், சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மற்றொரு நிதி தொகுப்பை வழங்குமாறும் புதன்கிழமை அன்று CII தலைவர் உதய் கோடக் அரசாங்கத்திற்கு வலியுறுத்தினார்.


கடந்த ஆண்டு அரசாங்கம் ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ECLGS திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடியை அறிவித்தது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நாட்டில் அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் அலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தாக்கத்தில், இது பொருளாதாரத்தையும் மற்றும் வளர்ச்சியையும் மோசமாகப் பாதிக்கிறது என்று கோடக் தெரிவித்தார். இதன் காரணமாக, "நடுத்தர குடும்பங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மற்றொரு நிதி தொகுப்பை வழங்குமாறும் அரசாங்கத்திற்குக் கடுமையாக வலியுறுத்துகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

2020 இல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆத்மநிர்பர் பாரத் தொகுப்பை அறிவித்தது மற்றும் ஒட்டுமொத்த மதிப்பு 27.1 லட்சம் கோடியாகக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது தேசிய GDP யை விட 13 சதவீதம் அதிகமாக உள்ளது.


தொற்றுநோயின் பாதிப்பைக் குறைக்க, அரசாங்கம் மற்றும் ரிசெர்வ் வங்கி ஒரே கட்டமாக மொத்தமாக 30 லட்சம் கோடி தொகுப்பைக் கொண்டுவந்தது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதமாகும்.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/cii-president-uday-kotak-pitches-for-fiscal-package-to-deal-with-covid-19-impact/articleshow/82976537.cms

Similar News