மாநிலங்களில் விதிக்கப்படும் கட்டுப்பட்டால் ஏற்றுமதியைப் பாதிக்கும்-EEPC!

Update: 2021-04-26 01:00 GMT

ஞாயிற்றுக்கிழமை அன்று பொருளியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கழகம்(EEPC), அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலங்களில் விதிக்கப்படும் கட்டுப்பட்டால் ஏற்றுமதியில் பாதிக்கக்கூடும் மற்றும் MSME யில் மோசமாகப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் கடைசி மாதங்களில் சற்று மீட்கப்பட்டு வந்தநிலையில், தற்போதைய கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பால் மீண்டும் குறைந்துள்ளது.


"வைரஸை கட்டுப்படுத்த மாநிலங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றது. இது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்(MSME) மோசமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அரசாங்கம் தடுப்பூசி செல்லுவதை விரைவுபடுத்த வேண்டும்," என்று கழகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.

மேலும் உலகளாவிய தேவை மற்றும் பொருளாதார நடவடிக்கையால் இரும்பு, உலோகம் உள்ளிட்ட 33 பொருளியல் பொருட்களில் 32 பொருட்களின் ஏற்றுமதிகளின் வளர்ச்சி சாதமாக இருந்தது என்பதையும் பதிவு செய்தது.

மேலும் 2021 மார்ச் மாதத்தில் அமெரிக்காவிற்கு பொருளியல் ஏற்றுமதி 1,152.82 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது, இதனால் தொடர்ந்து முக்கிய ஏற்றுமதி பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய இரண்டாவது ஏற்றுமதி இடமான சீனாவில் மார்ச் மாதத்தில் 553.06 மில்லியன் டாலராக உயர்ந்தது. ஐக்கிய அரபு அமீரகம் மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/imposition-of-curbs-by-states-could-affect-exports-eepc/articleshow/82240826.cms

Similar News