ஆக்சிஜென் கான்சென்டேடர்களுக்கு வரியா? GST கூட்டத்தில் முடிவெடுக்க வாய்ப்பு!

Update: 2021-05-23 09:42 GMT

மே 28 இல் GST கூட்டம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ஆக்சிஜென் கான்சென்ட்ரடோர்ஸ் இறக்குமதிக்கு 12 சதவீதம் வரி விதிக்க அழைப்பு விட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ஆக்சிஜென் கான்சென்ட்ரடோர்ஸ்கு IGST 12 சதவீதம் விதிப்பது "அரசியலமைப்புக்கு விரோதமானது" என்று தெரிவித்தது.


மேலும் அது மே 1 நிதியமைச்சகம், தனிநபர் பயன்பாட்டிற்கான ஆக்சிஜென் கான்சென்ட்ரடோர்ஸ் இறக்குமதிக்கு 12 சதவீதம் IGST யை விதித்த உத்தரவை ரத்து செய்தது. இதற்கான இறுதி முடிவு வெள்ளிக்கிழமை நடை பெறவிருக்கும் கூட்டத்தில் எடுக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருவாயில் அதிகமாகத் தாக்கம் ஏற்படாது என்பதால், இதுபோன்ற இறக்குமதிக்கு IGST க்கு விளக்கு அளிக்கலாம் என்று வரி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மே 28 இல் நடைபெறவுள்ள கூட்டத்தில் கொரோனா அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விகிதத்தைக் குறைப்பது மற்றும் மாநிலங்களின் இழப்பீடு பற்றாக்குறை பற்றியும் விவாதிக்க வாய்ப்புள்ளது.

தனிப்பட்ட பயன்பாட்டிற்கான ஆக்சிஜென் கான்சென்ட்ரடோர்ஸ் இறக்குமதிக்கு IGST யை 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறித்தது, இது ஜூன் 30 வரை செல்லுபடியாகும்.


சரக்கு மற்றும் சேவை வரின் கீழ் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி மத்திய மற்றும் மாநில அரசுக்குச் சரி பாதியாகப் பிரிக்கப்படுகின்றது. இதுவே CGST மற்றும் SGST எனக் கூறப்படுகின்றது.

Source: Economic Times

Similar News