சபாஷ்! இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க GST கவுன்சில் சிறப்பு அமர்வு! சுழன்று பணி செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Update: 2021-07-02 07:51 GMT

வியாழக்கிழமை அன்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க GST கவுன்சில் சிறப்பு அமர்வு விரைவில் நடைபெறும் என்று தெரிவித்தார்.


மேலும் அவர் நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் கண்காணிக்கப்படும் மற்றும் அனைத்து மாநிலங்களும் கவனிக்கப்படும் என்றும் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசுகையில் , கர்நாடக இழப்பீடு குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அனைத்து மாநிலங்களிலும் இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் குறித்து எழுந்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தாக்குதலின் தீவிரம், பாதிக்கப்படும் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை முதலியவற்றைக் கணக்கில் கொண்டு தடுப்பூசி மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றது என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

"மேலும் மாநிலங்களுக்கு ஏழு நாட்களுக்கு முன்னரே தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படுகின்றன, இதன்மூலம் அவர்கள் முன்னர் வழங்கியதைக் கணக்கிடப்படும், இதுவே ஒவ்வொரு மாதமும் நடைபெறுகின்றது," என்று அவர் கூறினார்.


மேலும், "இந்த நடைமுறை நன்கு கவனிக்கப்படும் மற்றும் மக்களின் நலன்களும் கவனிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்பதை ஊடகத்தின் மூலம் உறுதிப்படுத்துகிறேன்," என்று சீதாராமன் குறிப்பிட்டார்.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/gst-council-special-session-to-be-convened-to-discuss-compensation-related-issues-fm/articleshow/84037520.cms

Similar News