மத்திய அரசின் GST வரி வசூலில் ஏற்பட்ட மற்றொரு சாதனை.!

மத்திய அரசின் GST வரி வசூல் ரூபாய் 1.17 லட்சம் கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.

Update: 2021-10-02 13:37 GMT

மத்திய அரசின் GST வரி வசூல் அளவு கொரோனாவுக்கு பின்பு குறைந்த நிலையில் அரசு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. குறிப்பாக அரசாங்கத்திற்கு மிகப்பெரும் ஆதாயமாக இருந்து வந்த சரக்கு மற்றும் சேவை வரி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில மாதத்தில் GST வரி வசூல் மீண்டும் 1 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை கடந்து சாதனை படைத்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் மத்திய அரசுக்கு GST வரி விதிப்பு மூலம் சுமார் 1,17,010 கோடி ரூபாய் அளவிலான தொகையை வசூலித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். 


மேலும் கடந்த ஆண்டு முதல் கொரோனா அலை முடிந்த பின்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தது. இதனால் தற்போது பண்டிகை காலத்தையொட்டி நாட்டின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால் GST வரி வசூல் அதிகரித்துள்ளது. மக்கள் தற்பொழுது பண்டிகைக்காக அதிக பொருட்களை வாங்குகிறார்கள் இதன் காரணமாக அவர்கள் மறைமுகமாக செலுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி(GST) வழங்கும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மத்திய அரசின் நிதி நிலை அதிக GST வரி வசூல் அளவு அதிகரித்துள்ளது மத்திய அரசின் நிதி நிலையை மேம்படுத்தும் விஷயமாக உள்ளது.


இதனால் நடப்பு நிதியாண்டில் 2வது காலாண்டில் வரி வசூலில் சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டு உள்ளது. முதல் காலாண்டை விடவும் 5% உயர்வு நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் அளவிலான GST வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இது முதல் காலாண்டின் 1.10 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை விடவும் 5 சதவீதம் அதிகம் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி வசூல் அதிகரிப்புக்கு மிக முக்கியக் காரணம் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் வர்த்தகம் செய்வதன், வாயிலாகவும் உற்பத்தி அதிகரித்துள்ளதும் முக்கியமானதாக விளங்குகிறது.GST பிரிவுகள் செப்டம்பர் மாதத்தில் 1,17,010 கோடி ரூபாய் மொத்த GST வரி வருமானத்தில் வசூலிக்கப்பட்டு உள்ளது. 

Input & Image courtesy:Money control

 


Tags:    

Similar News