இந்த நிதியாண்டு கொரோனா தொற்றுநோயால் சற்று பாதிப்படைந்தது. மேலும் தற்போது அது முடிவடையவுள்ள நிலையில் மகாராஷ்டிராவில் சரக்கு மற்றும் சேவை வரி(GST) வசூலில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.6 சதவீதம் குறைந்துள்ளது.
2019-20 நிதியாண்டில் மார்ச் 25 வரை மாநிலத்தில் GST வசூல் 1.85 லட்சம் கோடியாகப் பதிவாகி இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் 21,594 கோடி பற்றாக்குறையுடன் 1.64 லட்சம் கோடியாகப் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஈட்டுவதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது மற்றும் இது நாட்டிலேயே அதிகமாக வசூலை ஈட்டக்கூடிய மாநிலமாகும்.
இது மத்திய GST, மாநில GST மற்றும் ஒருங்கிணைந்த GST உள்ளிட்டவற்றை உள்ளடக்குகிறது. மார்ச் 8 இல் மகாராஷ்டிரா தனது பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, SGST வசூலில் இலக்கை எட்டுவதற்குத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. 2020-21 வசூலில் 1 லட்சம் கோடியாக நிர்ணைக்கபட்டிருந்தாலும், மாநிலம் 88,000 கோடியை வசூல் செய்திருந்தது. இவை இரண்டுக்கும் இடையே உள்ள இடைவெளி 19,146 கோடியாகும்.
"கொரோனா தொற்றுநோயாலும் மற்றும் மத்திய அரசிடம் இருந்து இழப்பீடு தொகையைப் பெறாததாலும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த தொகையை எட்டமுடியவில்லை," என்று பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொற்றுநோயால் ஊரடங்கு விதிக்கப்பட்ட நேரத்தில் பொருளாதார நடவடிக்கை மேற்கொள்ளாததால் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் மிகக் குறைவாக இருந்தாலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போது மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது.
அக்டோபர் 2020 இல் பண்டிகை காலங்களில் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது. மார்ச் 2019-20 14,712 ஆக பதிவாகியிருந்தது மற்றும் மார்ச் 2020-21 இல் 15,765 ஆக இருந்தது. கொரோனா தொற்றுநோயின் உச்சத்தின் போது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் SGST வசூல் மிகவும் குறைவாக இருந்தது. இது 2019 யை ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 81.3 சதவீதம் குறைவாகவும் மற்றும் மே மாதத்தில் 47.6 சதவீதத்தை விட குறைவாக இருந்தது.
கட்டுப்பாடுகளைத் தளர்த்திய போது ஜூன் மாதத்தில் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது மற்றும் மீண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதகங்களில் வீழ்ச்சியடையத் தொடங்கியது. செப்டம்பர் 2020 இல் மகாராஷ்டிரா அமைச்சரவையில் மாநில நிதித்துறை அமைச்சர் காட்டிய விளக்கப்படத்தில் GST வசூல் குறித்த கவலையைத் தெளிவாகக் காட்டியது.
"மகாராஷ்டிராவில் GST வசூலில் காட்டவேண்டிய முக்கிய கவனம் அதிலிருக்கும் பலவீனத்தைக் காண்பிக்கிறது," என்று அது குறிப்பிட்டிருந்தது. பொருளாதார மீட்பில் வேலையின்மை மற்றும் வேலை இழப்புகள் முக்கிய தடையாக இருப்பதையும் அது சுட்டிக்காட்டியது.