கொரோனா தொற்றின் இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் GST வசூலில் அதிக பங்களிக்கும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள முழு நேர ஊரடங்கால் மே மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 10 முதல் 20 சதவீதம் குறைய வாய்ப்புண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சில தடை கட்டுப்பாடுகள் காரணமாக மே மாதத்தில் GST வசூல் 10 முதல் 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புண்டு என்று KPMG இந்தியாவின் மறைமுக வரி பங்குதாரர் ஹர்பீர்த் சிங் தெரிவித்தார்,
மார்ச் மாதத்தில் மகாராஷ்டிரா மொத்தம் 17,038 கோடி GST வசூலைப் பதிவு செய்திருந்தது இது மாநிலத்தின் 91,869 கோடி மொத்த GST வசூலில் 18.5 சதவீதமாகும். மேலும் இன்னும் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டால் நுகர்வோர் சேவையில் இருதரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்குகள் மே 2020 வசூல் முழுமையாகச் சரிந்தது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
"கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கை விதிக்க நேரிடும். ஆனால் இது அரசாங்கத்திற்குப் பெரிய சவாலாக அமையும். மேலும் வரி வசூலில் V ஷேப் வளர்ச்சிக்குப் பதிலாக W ஷேப் வளர்ச்சியை எட்டக் கூடும்," என்று சிங் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த ஆண்டு நாடு தழுவிய ஊரடங்கால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மாநிலங்களை சில பகுதிகளில் மட்டும் விதிக்கப்படும் ஊரடங்கால் பாதிப்பு பெரியளவில் இருக்காது என்று பிரைஸ் வாட்டர்ஹவுஸ் &கோ பங்குதாரர் ப்ரதீக் ஜெயின் கூறினார்.
மேலும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் முழு ஊரடங்கும் மற்றும் டெல்லி, குஜராத், ஹரியானா, ஒடிசா மற்றும் யூனியன் பிரதேசத்தில் சில இடங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
source: https://m.economictimes.com/news/economy/indicators/gst-collections-to-drop-20-in-may-due-to-state-lockdown-like-curfews-say-experts/articleshow/82066439.cms