கொரோனா காரணமாக மே மற்றும் ஜூன் மாதத்தில் G.S.T வசூல் 30 சதவீதம் குறைய வாய்ப்பு.!
இந்தியப் பொருளாதாரத்தை கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், அது மத்திய அரசாங்கத்தின் வருவாயிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் விதிக்கப்பட்ட ஊரடங்கு மே மற்றும் ஜூன் மாத GST வசூலில் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஏப்ரல் மாதத்தை விட 30 சதவீதம் சரிவைக் காணக்கூடும் என்றும் கூறப்படுகின்றது. ஏப்ரல் மாதத்தில் GST வசூல் 1.41 லட்சம் பெற்று உச்சத்தை அடைந்தது. மூன்று மாத காலங்களில் முதன்முறையாக ஜூன் மாதத்தில் GST வசூல் 1 லட்சத்திற்கும் கீழ் குறையும் என்று எதிர்ப்பாக்கப்படுகின்றது.
ஊரடங்கு காரணமாக நாட்டில் மூன்று பங்கில் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக் உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் இரண்டாவது அலையில் எழுச்சி பெற அரசு எதிர்பார்க்கின்றது.
"தேவைகளிலும் கடுமையாக வீழ்ச்சியை அடைந்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லியில் வழக்குகள் குறையத் தொடங்கியுள்ளன, ஆனால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக போன்ற மாநிலங்களில் விரைவில் உச்சத்தை அடையும், ஜூலை அல்லது செப்டம்பர் மாதத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும்," என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இரண்டாம் மற்றும் வரவிருக்கும் மூன்றாம் அலை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றன.