வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற மத்திய அரசு தொடர்ந்து செயல்படுகிறது - இந்தியா Inc க்கு நிர்மா சீதாராமன்!

Update: 2021-04-19 13:32 GMT

திங்கட்கிழமை அன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன், கொரோனா தொற்றுநோயின் இரண்டாம் அலையைச் சமாளிக்க மற்றும் இந்திய இன்க் நிறுவனங்களில் கவலைகள் குறித்தும் பல தொழில்துறைத் தலைவர்களின் கருத்துக்களை எடுத்துள்ளதாகவும் மற்றும் மத்திய அரசாங்கம் தொடர்ந்து மாநிலங்களுடன் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றத் தொடர்ந்து செயல் படும் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.


கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் நாட்டின் பொருளாதாரத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளப் பல வணிகத்திடமிருந்து கருத்துக்களும் நிர்மலா சீதாராமன் பெற்றுக்கொண்டார்.

மேலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று உருவெடுத்த நிதியாண்டு தொடக்கத்தில் முதல் காலாண்டில் பொருளாதாரம் 23.9 சதவீதம் குறைந்தது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

CII தலைவர் உதய் கோடக், உதய் சங்கர், தலைவர் பிச்சி, வினீத் அகர்வால் தலைவர் அசோச்சம் உள்ளிட்ட தொழில் தலைவர்களிடம் நிதியமைச்சர் உரையாடினார்.

மேலும் அவர் டாட்டா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் T V நரேந்திரன், L&T தலைவர் A M நாயக், TCS நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கோபிநாத், மாருதி சுசுகி தலைவர் R C கோபாலன், TVS குழு தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர்களிடம் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறித்தும் மற்றும் அதனால் எழும் நிலைமை குறித்தும் நிர்மா சீதாராமன் கலந்துரையாடினார்.


மேலும் கடந்த வாரம் நிர்மலா சீதா ராமன், கொரோனா தொற்றின் இரண்டாமலையை கட்டுப்படுத்த உள்ளூர் கட்டுப்பாடுகளே விதிக்கப்படும் மற்றும் நாட்டில் பெரிய அளவிற்கான ஊரடங்கு விதிக்கப்படாது என்பதைத் தெளிவுபடுத்தினார்.

source: https://economictimes.indiatimes.com/news/economy/policy/govt-working-to-save-lives-livelihood-fm-tells-india-inc-amid-covid-surge/articleshow/82140007.cms

Similar News