பெருமளவில் குறைந்த பெட்ரோல் டீசல் விலை: RBI ரெப்போ விகிதம் உயருமா ?

இந்தியாவில் குறைந்துள்ள பெட்ரோல் டீசல் விலை காரணமாக, RBI வங்கியின் ரெப்போ விகிதம் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதா?

Update: 2021-11-09 13:27 GMT

பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அனைத்தும் பணவீக்கம் மற்றும் வர்த்தகச் சந்தையை மேம்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி(RBI) அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் தான் நாட்டின் பணவீக்கம் மற்றும் வர்த்தகத்திற்குப் சுமையாக இருந்த எரிபொருள் விலையை மத்திய அரசு அதிகளவில் குறைத்துள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கிக்கு வட்டியை உயர்த்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.


 நோய் தொற்று காரணமாக ஏற்கனவே மக்கள் அவதி படும் ஒரு சூழ்நிலையில் ரெப்போ விகிதத்தில் எந்த வித மாற்றமும் இல்லாமல் RBI அறிவித்து இருந்தது. இந்நிலையில் தற்பொழுது சிறிதுசிறிதாக பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் RBI-யின் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் எரிபொருள், எரிவாயு, சமையல் எண்ணெய், காய்கறி, உணவுப் பொருட்களின் விலை அதிகமாகவும் உள்ளது. இதனால் பணவீக்கத்தின் அளவுகள் தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வந்தது. எரிபொருள் விலை இந்நிலையில் எரிபொருள் விலை குறைந்த காரணத்தால் அனைத்து உற்பத்தி பொருட்கள் முதல் விற்பனை பொருட்கள் வரையில் அனைத்தும் விலை குறைய வாய்ப்புகள் உள்ளது.


 இந்தச் சூழ்நிலையில் வர்த்தகச் சந்தையைக் கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்பு கிடைத்துள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை பொருட்கள் எரிபொருள் விலையால் அனைத்து உற்பத்தி பொருட்களின் விலையும் உயரும். உதாரணமாக அனைத்து உற்பத்தி பொருட்களும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குத் தான் செல்ல வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்திற்கு அதிகப்படியான தொகையைச் செலவிட வேண்டி உள்ளது.

Input & Image courtesy:Timesnownews


Tags:    

Similar News