6,100 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல்!

Update: 2021-04-03 13:48 GMT

மத்திய அரசாங்கம் புதிதாக 6,176 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டங்களுக்கான ஒப்புதல் ஆனது வியாழக்கிழமை அன்று வழங்கப்பட்டுள்ளது.


இந்த திட்டமானது மகாராஷ்டிரா, அசாம், லடாக் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை உள்ளடக்குகின்றது. "நாடு முழுவதும் பல திட்டங்களை மேம்படுத்தவும், புனரமைக்கவும் மற்றும் மறு சீராய்வு செய்யவும் சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது," என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தில் மகாராஷ்டிராவில் 2,801.33 கோடி மதிப்புள்ள திட்டமும் மற்றும் அசாமில் 1,259 கோடி மதிப்புள்ள திட்டமும் உள்ளடங்கும் என்றும் கூறப்பட்டு ள்ளது.




மேலும் அமைச்சகத்தின் அறிக்கையின் படி, லடாக்கிற்கு 779 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு ஒப்புதலும் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு 810 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News