ஆப்கானிஸ்தான் பிரச்சனை இந்தியாவின் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா ?

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா செய்துள்ள முதலீட்டில் இனிவரும் காலங்களில் மாற்றம் ஏற்படுமா?

Update: 2021-08-17 12:47 GMT

தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு மக்கள் அங்கு வாழப் பிடிக்காமல் கிடைக்கும் அனைத்து வழிகளிலும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் இந்தியாவிற்கு மறைமுகமாக அங்கு செய்துள்ள முதலீட்டில் சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முதலீட்டைக் குறைத்த இந்திய அரசு, ஏப்ரல் மாதம் ஹெராட் மற்றும் ஜலாலாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த இந்திய அரசின் திட்டங்களை மூடிவிட்டு இந்திய அதிகாரிகளைத் திரும்ப அழைத்தது. 


ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா செய்த முதலீடுகள் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதால் இனி அது சாத்தியமாகாது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முற்றிலுமாக தடை படும். இதனால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் இந்தப் பிரச்சனையின் மூலம் தடைப் பெற உள்ளது. 


ஏற்றுமதி பொருட்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு உலர்ந்த திராட்சை, வால்நட், பாதாம், அத்தி, பைன் நட், பிஸ்தா மற்றும் சில மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி பொருட்கள் இதேபோல் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு டீ, காஃபி, மிளகு, பருத்தி மற்றும் இதர வர்த்தகப் பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தாலிபான்கள் ஆப்கானில்தானை கைப்பற்றியதன் மூலம் இரு நாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தகம் தடை பெற்றுள்ளது. 

Input:https://m.economictimes.com/news/economy/foreign-trade/afghanistan-situation-to-impact-trade-with-india-exporter 

Image courtesy: economic times 


Tags:    

Similar News